இந்தியா - நியூசி., இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்து; மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தகவல்
லக்னோ: இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை (ஏப்ரல் 27) கையெழுத்தாக உள்ளது என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் அவரது மனைவி சீமா கோயல், மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டாட் மெக்கிளே மற்றும் அவரது மனைவி நதீன் மெக்கிளே ஆகியோர் சென்று இருந்தனர். அப்போது நிருபர்களிடம் பீயூஷ் கோயல் கூறியதாவது:
அமைச்சர் மெக்கிளேவுக்கும் எனக்கும் இடையே நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோரால் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் நாளை கையெழுத்திடப்பட உள்ளது. இன்னும் சில மாதங்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும். நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 100% அங்கு வரியின்றி சென்றடைய முடியும்.
ஆக்ராவில் உள்ள தோல் தொழில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு மகத்தான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமைச்சரும் அவரது மனைவியும் இந்தியாவிற்கு வருகை தந்தனர், மேலும் அவர்கள் தாஜ்மஹாலைப் பார்க்க விரும்பினர்.
அவர்கள் இன்று அதைப் பார்வையிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் தாஜ்மஹாலை மிகவும் விரும்பினர். இங்குள்ள நிர்வாகத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பீயூஷ் கோயல் கூறினார்.
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, 2025ம் ஆண்டு டிசம்பரில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
@block_B@
முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் வீடியோவுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில்; இந்தியாவுடன் நாங்கள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறோம். இது நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றை திறந்து விடுகிறது. இது ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இது நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு 140 கோடி மக்கள் தொகை கொண்ட மற்றும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கப்போகும் இந்தியச் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கான கதவுகளையும் இது திறந்து விடுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். block_B
Nadine McClay is the wife of New Zealand politician and Minister of Trade and Agriculture
இவரின் விஜயம் இந்தியாவிற்கு நல்ல செய்தியை கொண்டுவரட்டும்மேலும்
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
-
கடுவனுாரில் இரைதேடி குவியும் பறவைகள்
-
கூத்தாண்டவர் கோவிலில் நகை திருட்டு: ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
-
ஏமப்பேர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் உற்சாக குளியல்