பவானியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

ஊத்துக்கோட்டை: கோடை விடுமுறையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபடுவர்.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை என்பதால் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வந்து, வேப்ப இலை ஆடை அணிந்து, அலகு குத்தி, பொங்கல் வைத்தனர். அதிகளவு பக்தர்கள் திரண்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement