பழைய வாகனங்களை ஏலமிட்டு புதிதாக வாங்க பட்டியல் சேகரிப்பு
கோவை: தீயணைப்புத்துறை சார்பில், ஏலமிட வேண்டிய பழைய வாகனங்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தீயணைப்புத்துறையில் கடந்த மூன்று மாதங்களில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மாநில அளவில் புதிய வாகனங்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது.
புதிய வாகனங்கள் வாங்குவதற்காக, பழைய வாகனங்களை ஏலத்தில் விட துறை அதிகாரிகளால் திட்டமிடப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '15 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது. இது போன்ற பழைய வாகனங்கள் அனைத்து தீயணைப்பு ஸ்டேஷன்களிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பட்டியல் எடுத்துள்ளோம்; இவ்வாகனங்கள் ஏலத்தில் வாகனங்கள் விடப்பட்டு அதன் வாயிலாக வரும் தொகை கொண்டு புதிய வாகனங்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement