பாத்திர உற்பத்தி துவக்கம்

அனுப்பர்பாளையம்:அனுப்பர்பாளையம் பகுதியில் ஏப்ரல் 27 முதல் பாத்திர உற்பத்தி மீண்டும் துவங்குகிறது.

அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திரத் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம், தொழிலாளர் துறை அதிகாரி முன்னிலையில் கையெழுத்தானது. இதில் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 16 சதவீதம்; பித்தளை மற்றும் செம்பிற்கு 23 சதவீதம், ஈயப் பூச்சு பாத்திரங்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் இந்த புதிய கூலி உயர்வு காரணமாக, பாத்திரங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகளுக்குத் தெரியப்படுத்தவும், விலை நிர்ணயம் செய்யவும் கடந்த 20- முதல் 26-ம் தேதி வரை பாத்திர உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. வேலைநிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் உற்பத்தியைத் தொடங்க உற்பத்தியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement