தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு :கோவையில் மூன்று பகுதிகளில் கண்காணிப்பு
கோவை: கோவையில் மூன்று பகுதிகளில், தீவிர ரத்த நோய்களான தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கு இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது.
மரபணு ரீதியாக கடத்தப்படும் ரத்த நோய்களான தலசீமியா, சிக்கிள் செல் அனீமியாவுக்கு, தேசிய சுகாதார இயக்கம் சார்பில், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் தலசீமியா என்பது, ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உருவாகாத நிலை. கடுமையான ரத்த சோகை ஏற்படும்.
சிக்கிள் செல் அனிமியா என்பது வட்டமாக இருக்கும், ரத்த சிவப்பணுவை அரிவாள் வடிவமாக மாற்றும் நிலை. இதனால், ரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்த முடியாது.
கடுமையான வலியை ஏற்படுத்தும். இவ்விரு நோய்களும், மரபணு மூலம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. மலைவாழ், பழங்குடியின மக்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
கோவையில் குறிப்பிட்ட மூன்று பகுதிகளை சுற்றியிருப்பவர்களுக்கு இப்பாதிப்பு இருப்பது, தொடர் மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இப்பகுதியை சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணிகளை பரிசோதித்து, கருவிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு ஆரம்ப மற்றும் இடையீட்டு சிகிச்சை மைய டாக்டர் சொக்கலிங்கம் கூறியதாவது:
தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் கீழ், குழந்தைகளுக்கான பிறவி நோய்கள், சத்து குறைபாடு, மரபணு ரீதியாக ஏற்படும் பாதிப்பு, ஆட்டிசம் போன்ற மூளை வளர்ச்சி குறைபாடு சார்ந்த பாதிப்புகளுக்கு, ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளிக்கிறோம்.
தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்க, கருவிலே சிகிச்சை துவங்கப்படுகிறது. கோவையில் குறிப்பிட்ட மூன்று பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர்.
கணவன், மனைவிக்கு இப்பாதிப்பு இருக்கிறதா என ரத்த பரிசோதனை செய்யப்படும். அது உறுதியானால், 5 மாத கர்ப்பமாக இருக்கும் போதே, கருவில் உள்ள குழந்தைக்கு கடத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கப்படும். இதனால், கருவில் இருந்தே, குழந்தையை கண்காணித்து, சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்க, கருவிலே சிகிச்சை துவங்கப்படுகிறது. கோவையில் குறிப்பிட்ட மூன்று பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர்.
மேலும்
-
ஈரான் போர் எதிரொலி; ஓபெக் அமைப்பில் இருந்து வெளியேறும் ஐக்கிய அரபு அமீரகம்
-
திருத்தணி கோவிலில் முடிகாணிக்கை மண்டபம் விரிவுபடுத்த வேண்டும்: பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிேஷகம்
-
கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா
-
அலையில் கரை சேர்ந்துவிடுவோம் அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை
-
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மொபைல் எடுத்து செல்ல தடை