லண்டன் மாரத்தான் போட்டி: கென்ய வீரர் புதிய உலக சாதனை
லண்டன்: லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே புதிய உலக சாதனை படைத்துள்ளார். பந்தய தூரத்தை அவர் 1 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்.
ஓட்டப்பந்தய விளையாட்டு உலகில் மாபெரும் போட்டியாக அறியப்படுவது மாரத்தான் ஓட்டம். அப்படிப்பட்ட பெருமையை பெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலக நாடுகளின் பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், இந்த போட்டியில் கென்யாவின் செபஸ்டியன் சாவே போட்டி தூரத்தை (42.2 கிமீ) முதலில் கடந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகள் ஆகும். இது புதிய உலக சாதனையாகும். அதாவது மாரத்தான் உலகில் 2 மணி நேரத்திற்கும் குறைவாக எந்த ஒரு வீரரும் போட்டி தூரத்தை கடந்தது இல்லை என்ற தடையை அவர் உடைத்துள்ளார்.
இதன் மூலம் 2023ல் சிகாகோவில் கென்யாவின் மறைந்த கெல்வின் கிப்டம் படைத்திருந்த 2 மணி நேரம் 35 வினாடிகள் என்ற உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். அதாவது வெறும் 65 வினாடிகள் நேரம் முன்பாக போட்டி தூரத்தை கடந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். உகாண்டாவின் யோமிப் கெஜலிச்சா 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 41 வினாடிகளில் கடந்து 2வது இடத்தை பிடித்தார்.
புதிய உலக சாதனையை படைத்து இருக்கும் 29 வயதான செபஸ்டியன் சாவே நடப்பு சாம்பியன் ஆவார். தற்போது அவர் படைத்துள்ள புதிய சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சாதனை குறித்து செபஸ்டியன் சாவே பேசியதாவது; பந்தய தூரத்தில் இலக்கை அடைந்த பின்னர் நேரத்தை பார்த்த பின் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நாள் என்று கூறினார்.
போட்டிக்கு முன்னதாக, நிருபர் ஒருவருக்கு பேட்டியளித்த செபஸ்டியன் சாவே, என்றாவது ஒருநாள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக போட்டியை கடக்கும் ஒரு நபராக நான் இருப்பேன் என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் கென்ய வீரருக்கு.மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்