தண்டுமாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம்

கோவை: தண்டுமாரியம்மன் கோயிலில், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடந்தது.

அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா, கடந்த 14ம் தேதி, கொடியேற்றம் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அக்னிச் சாட்டு, திருவிளக்கு வழிபாடு, சிம்மம், குதிரை, அன்ன வாகனங்களில் அம்மன் திருவீதி உலா, திருக் கல்யாண உற்சவசம், மகா அபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 1008 சங்குகளால், சங்காபிஷேகம் நடந்தது. உற்சவ மூர்த்தி முன் நெல் பரப்பி, அலங்கரிக்கப்பட்ட சங்குகள் வைக்கப்பட்டு, யாகத்துடன் வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

Advertisement