மானாமதுரை சித்திரை விழா திருக்கல்யாணம்

மானாமதுரை:மானாமதுரை சித்திரை விழாவில் சுவாமிகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். திருக்கல்யாணம் ஏப்ரல் 28 ல் நடைபெற உள்ளது.

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி துவங்கியது. சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி 5ம் நாள் மண்டகப்படியில் நடந்தது.நேற்று முன்தினம் 6ம் நாள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடையுடன் சோமநாதரும் தனித்தனி ரிஷப வாகனங்களில் இரட்டை சப்பரங்களில் வீதியுலா வந்தனர்.ஏப்ரல் 28 காலை 10:35 மணியிலிருந்து 11:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 29 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

Advertisement