ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
சென்னை:தமிழகத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி தங்கம் விலை, சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,200 ரூபாய்க்கும், சவரன், 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. ஏப்ரல் 27, தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 14,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,13,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement