மதகுபட்டி போலீசாருக்கு குடியிருப்பு அவசியம்

சிவகங்கை:மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு மதகுபட்டியில் காவலர் குடியிருப்பு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட 30 போலீசார் பணிபுரிகின்றனர். இந்த ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 79 கிராமங்கள் உள்ளன. இவர்கள் தான் இரவு ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு செல்லவேண்டும். இங்கு பணிபுரியும் போலீசாரின் குடும்பங்கள் பெரும்பாலும் சிவகங்கையில் வசிக்கின்றனர். இவர்கள் இரவு பணியை முடித்துவிட்டு சிவகங்கை சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். ஒருசிலர் மதகுபட்டியில் போலீசார் குடியிருப்பு இல்லாததால் வாடகை வீட்டில் தங்குகின்றனர். குடும்பத்தை விட்டு தனியாக இருக்கும் போலீசார் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மதகுபட்டியில் போலீஸ் குடியிருப்பு கட்டித்தர அரசு முன்வரவேண்டும்.

////

Advertisement