பிரதான குழாயில் உடைப்பு மாகரலில் வீணாகும் குடிநீர்
காஞ்சிபுரம்: மாகரலில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் ஒன்றியம், மாகரல் ஒட்டியுள்ள செய்யாற்றாங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு பல்வேறு ஊராட்சிகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மாகரல் பிரதான சாலை, பெரிய தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் பயிற்சி
-
மீண்டும் வெல்லுமா சென்னை * மும்பை அணியுடன் பலப்பரீட்சை
-
விஜய் கட்சிக்கு 41 சதவீதம் ஓட்டு : ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்
-
துாய்மை பணி செய்ய வந்த மஹாராஷ்டிரா எம்.பி.,: செஞ்சி கோட்டையில் அனுமதி மறுப்பு
-
சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்பதற்காக அமலாக்கத்துறை தலையிட வேண்டியதில்லை: ஐகோர்ட்
-
மே தினத்தில் இயங்கிய 105 நிறுவனம் மீது நடவடிக்கை * தொழிலாளர் துறை நடவடிக்கை