தாழ்வாகச் செல்லும் மின்கம்பி. விபத்து ஏற்படும் அபாயம்
திருச்சுழி:திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சியில் கோயில் அருகே மின் கம்பி தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எம்.ரெட்டியபட்டியில் மெளனகுருசாமி கோயில் உள்ளது. இந்த பகுதி வழியாக விவசாய நிலங்களுக்கு செல்வர். விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்வர். இந்த பகுதியில் தாழ்வாக மின்கம்பி செல்கிறது. கையை நீட்டி தொடும் அளவில் உள்ளது. விளை பொருட்களை டிராக்டர்களில் ஏற்றி வரும் போது மின்கம்பியில் உரசும் அபாயத்தில் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் ஒன்றோடு ஒன்று உரசி மின்தடை ஏற்படுகிறது.
மின்வாரிய நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள மின் வயரை உயர்த்தி அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
Advertisement
Advertisement