சிறுமி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் தேவஸ்ரீ, 17; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement