புத்தவேடில் புத்த பூர்ணிமா வழிபாடு

குன்றத்துார்:குன்றத்துார் அருகே புத்தவேடு கிராமத்தில் புத்த பூர்ணிமா சிறப்பு வழிபாடு நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே இரண்டாம்கட்டளை ஊராட்சியில் புத்தவேடு என்ற கிராமம் உள்ளது. கி.பி.,7ம் நுாற்றாண்டில் பவுத்த மத ஆய்வுக்காக இந்தியா வந்த, சீனா பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கும் வந்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் புத்த மதம் செழித்திருந்ததையும், புத்தவேடு கிராமத்தை பற்றியும் தன் பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புத்தவேடு கிராமத்தில் தியான நிலையில் சோழர் காலத்து புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டு அதே பகுதியில் வைக்கப்பட்டு வழிபடப்பட்டது.

அதன்பின், 2003ம் ஆண்டு முதல், புத்தவேடு தியான புத்தர் திருமேனி திருத்தலமாக நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு, புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு இங்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பவுத்த பற்றாளர்கள் பலர் வழிபட்டனர்.

Advertisement