ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வில் இருக்கலாமா: தமிழிசை
-நமது நிருபர் -
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ல் சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் குடும்பத்துடன் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்று விட்டார்.
துணை முதல்வர் உதயநிதி, தன் மனைவி மற்றும் மகளுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் ஓய்வுக்குப் பின், அவர் தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இதை மிகக் கடுமையாக விமர்சித்து, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஓட்டளிக்க கோடை வெயிலில் வரிசையில் நின்ற மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் தங்கள் பணிகளை கவனித்துக் கொண்டுள்ளனர். ஆனால், எப்போ தும் பணியில் இரு க்க வேண்டிய முதல்வர், குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
ஓட்டளித்து துணை நிற்கும் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட பணியில் இருக்க, துணை முதல்வர் அயல் நாட்டு பயணத்தில் குடும்பத்தினருடன் உள்ளார். அரசியல் என்பது அனைவருக்கும் சமமே. தி.மு.க.,வின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை, அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல; இறக்கத்திற்காகவே.
மொத்தத்தில் ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வுக்கு சென்றுள்ளனர். இதே கூட்டம் தான், அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரைப் பார்த்து, 'கும்பி எரியுது; குடல் வேகுது; குளுகுளு ஊட்டி ஒரு கேடா?' என்று கேலி பேசினர். பொதுநலம் என்று பேசி திரியும் இந்த சுயநலவாதிகளை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Thamizhisai thinks she is highly knowledgeable. What did she do in BJP to praise Kamaraj. Utter nonsense. She has spoiled the name of Kumari Anandan
Manipur is creation of congress and America collaboration. It took years to control naxalites in Andra Orissa borders. Manipur is similar to that. If BJP wins in WB , next WB will become Manipur. Our enemies are inside. People like you have not understood the cheap politics of opposition parties
எந்த ஆய்வையும் முதலமைச்சர் தன் இருப்பிடத்தில் இருந்தே செய்து கொண்டிருப்பார்.தமிழகமக்கள் எல்லாம் அறிந்தவர்கள். வீண் வம்புக்கு இழுக்காதீங்க தமிழசை...பொறுங்க 4மே வரை.
மணிப்பூர் பற்றி எரியும் போதெல்லாம் உங்க தலைவர் தாய்லாந்தில் தோசை சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ஏங்க தமிழிசை.பரவாயில்லையா.அதுபற்றியும்உங்க வாயை தொரக்கலாமே.
ஒரு வார ஓய்விலிருந்தாலும் ஆய்வுகள் நிகழ்வது தெரியாதா தமிழிசை?
காமராஜ்,pakthavachchalam ஆழ்ச்சியில், புழுத்த நத்தை அரிசி, கலப்பட அரசி, ரேஷன் கடை பொருள் கிடைக்காதது எல்லாம் சாதாரண மக்களை பாத்தித்தது, சாதி வெறியர்களுக்கு தலையில் yeraathu.
தேர்தலில் செலவு செய்த பணத்தை கொண்டு, தொண்டர்கள் எல்லோரும் சுவிஸ் பொய் வர முடியும், நீங்க உங்க பெயர் பேப்பரில் வரவேண்டும் என muthalvarai வம்புக்கு இழுக்கிறீர்கள். காமராஜர் அழகிஹியில் தான் வோட்டுக்கு பணம் என்பது புழக்கத்தில் வந்தது.. கிராமம் கிராmamaga செண்டு காங்கிரஸ் காரபினுக்கு பணம் கொடுத்து வந்தது
காமராஜ்..
இவர் தன் மதிப்பை கெடுத்துக் கொண்டுள்ளார்.
மதிப்பு?மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்