செகந்திராபாத்-ராமேஸ்வரம் இடையே விரைவு ரயில் இயக்க கோரிக்கை

ராமநாதபுரம்: செகந்திராபாத்--ராமேஸ்வரம் இடையே வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்க ரயில்வே வாரியத்திற்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடந்த ஆண்டு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் திருப்பதி, திருவண்ணாமலை, சிதம்பரம், அதிராம்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக நகரங்களுக்கு செல்பவர்கள் பயனடைந்தனர். பரமக்குடி--ராமநாதபுரம் இடையே நடந்த ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே வாரியத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கூறியதாவது: செகந்திராபாத்--ராமேஸ்வரம் இடையே செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விரைவு ரயில் இயக்க வேண்டும். இதனால் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகள் பயனடைவர் என்றனர்.

Advertisement