ஹன்ஸ்ராஜ் கல்லுாரி அதிரடி: 30 மாணவர்கள் சஸ்பெண்ட்

புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லுாரி, 30 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து ஏப்ரல் 27 ல் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஹன்ஸ்ராஜ் கல்லுாரி நிர்வாகம் சார்பில் கூறப்படுவதாவது:

ஹன்ஸ்ராஜ் கல்லுாரியில் நடந்த கல்லுாரி விழாவின் போது, மாணவர்களின் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை, சமூக ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, அந்த படங்களை வெளியிட்ட மாணவர்களுக்கு, தங்கள் தரப்பு நியாயத்தை கூற, பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, தங்கள் பெற்றோருடன் வந்து, கல்லுாரி நிர்வாகிகள் முன் ஆஜராக வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெற்றோருடன் ஆஜராகாமல், கடைசி நேரத்தில் வந்த பார்த் ஸ்ரீவத்சவா, தன் தரப்பில் செய்ததை நியாயம் என கூறி, வாதிட்டார். அவரின் செயல்பாடு குறித்து, எவ்வித தயக்கமும் அவரிடம் காணப்படவில்லை.

அவர் போலவே, 29 மாணவர்களும், தங்கள் செயலை நியாயப்படுத்தியதால், வேறு வழியின்றி, 30 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு கல்லுாரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து, போராட்டம் நடத்த, டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 'ஹன்ஸ்ராஜ் கல்லுாரி நிர்வாகம், சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும்' என, டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement