தேர்தல் முடிந்தும் தொடரும் பணப்பட்டுவாடா தகராறுகள்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் முடிந்தும் தற்போது கட்சியினர் பணம் தரவில்லை என்ற தகராறுகள் ஆங்காங்கே நடக்கிறது. இந்த தேர்தலில் மக்களே வெளிப்படையாக பணம் கிடைக்கவில்லை என தெரிவிப்பதால் போலீசார் திணறி வருகின்றனர்.
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகளுக்கான தேர்தலில் ஓட்டுப்பதிவில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் ஏப்.23ல் நடந்து முடிந்தது.
ஆனால் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான பிரச்னைகள் ஏப்.22ல் துவங்கி தற்போது வரை தொடர்ந்து நடக்கிறது. ஆளும், எதிர்கட்சியினர் தங்களின் வெற்றி வாய்ப்புக்கு தகுந்தாற் போல ஒரு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை கொடுத்தனர்.
இந்த பணம் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அந்தந்த கட்சி நிர்வாகிகளையும், யார் வீடு வீடாக பணத்தை கொடுத்தார்களோ அவர்களிடம் முறையீட்டு தங்களுக்கும் பணத்தை கொடுக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதனை விலக்க சென்ற போலீசாரிடமே நீங்களே கேட்டு பணத்தை வாங்கி கொடுங்கள் என கேட்டனர். இவற்றை சமாளித்து தேர்தலை முடித்தாலும் ஏப்ரல் 27 வரை பணப்பட்டுவாடா தொடர்பான பிரச்னைகள் நடந்துள்ளது. எப்போதும் இல்லாத முறையாக மக்களே பணத்தை கொடுங்கள் என கேட்டு தகராறில் ஈடுபடுவதால் போலீசார் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.
மேலும்
-
காமன்வெல்த் பளுதுாக்குதல்: இந்தியா கலக்கல்
-
காது கேளாதோர் மாநில செஸ் 60 பேர் உற்சாக பங்கேற்பு
-
உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’
-
மாநில நீச்சல் போட்டி சென்னை வீரருக்கு வெள்ளி
-
ஒரு சொத்துக்கு ‘இரட்டை ஆவணம்’ தயாரித்து ரூ.3 கோடி நிலமோசடி: சகோதரர்கள் 4 பேர் கைது
-
மதுராந்தகத்தில் கலெக்டர் ஆய்வு