மாநில நீச்சல் போட்டி சென்னை வீரருக்கு வெள்ளி
சென்னை: மாநில நீச்சல் போட்டியில் சென்னை வீரர் வெள்ளி பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில் மாநில ஆக்வாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் வளாகத்தில், நேற்று முன்தினம் தொடகியது .
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பங்கேற்றனர். இதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
ஆடவர் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 200 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் போட்டியிட்ட சென்னையின் ஆஷிக் முகமது போட்டி துாரத்தை 3.55 நிமிடத்தில் கடந்து வெள்ளி பதக்கம் கைப்பற்றி அசத்திஉள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 50 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் போட்டியிட்ட ஆஷிக் முகமது, போட்டி துாரத்தை 53 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் கைப்பற்றிஉள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement