காமன்வெல்த் பளுதுாக்குதல்: இந்தியா கலக்கல்
அபியா: காமன்வெல்த் யூத், ஜூனியர் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 3 வெள்ளி என 4 பதக்கம் கிடைத்தது.
சமோவா தீவில், காமன்வெல்த் யூத், ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப், யுனிவர்சல் கோப்பை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ஜூனியர் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பெல்லானா ஹரிகா, அதிகபட்சமாக 197 கிலோ ('ஸ்னாட்ச்' 86, 'கிளீன் அண்ட் ஜெர்க்' 111) பளுதுாக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான ஜூனியர் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கரங்கி தரங்கிணி (179 கிலோ, 'ஸ்னாட்ச்' 79, 'கிளீன் அண்ட் ஜெர்க்' 100) வெள்ளி வென்றார். பெண்களுக்கான யூத் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூமிகா மோகித் (195 கிலோ, 'ஸ்னாட்ச்' 109, 'கிளீன் அண்ட் ஜெர்க்' 86) வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
யுனிவர்சல் கோப்பைக்கான 88 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் நிபேன், அதிகபட்சமாக 324 கிலோ ('ஸ்னாட்ச்' 140, 'கிளீன் அண்ட் ஜெர்க்' 184) பளுதுாக்கி வெள்ளி வென்றார்.
இதுவரை இந்தியாவுக்கு 5 தங்கம், 3 வெள்ளி என, 8 பதக்கம் கிடைத்துள்ளன.
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்