உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’
சென்னை: சென்னை உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’ போட்டியில், வீரர் – வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
நவீன் ஜிம் சார்பில், உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’ போட்டி, அயனாவரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. இதில், சென்னையின் பல்வேறு இடங்களில் இயங்கும் தனியார் உடற்பயிற்சி கூடங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.
இருபாலருக்கும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில், போட்டி நடைபெற்றது. ‘எக்யூப்ட்’ மற்றும் ‘கிளாசிக்’ என, இரண்டு விதங்களிலும், ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர்.
பெண்கள் பிரிவில், அண்ணா நகரை சேர்ந்த தீப்தி ராஜ், மொத்தம் 505 கிலோ எடையை துாக்கி, முதலிடத்தை பிடித்து கவனம் ஈர்த்தார்.
ஆண்கள் பிரிவில், போட்டி கடும் சவாலாக இருந்தது. ‘எக்யூப்ட்’ ‘ஏ’ பிரிவில், அம்பத்துார் பிரத், ‘பி’ பிரிவில் அம்பத்துார் நிரஞ்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
‘கிளாசிக்’ ‘ஏ’ பிரிவில், அயனாவரம் லிங்கேஷ், ‘பி’ பிரிவில் அம்பத்துார் யுவராஜ், ஆகியோர் முதல் இடங்களை கைப்பற்றினர். வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு