விளையாட்டு விடுதியில் சேர வந்தது அழைப்பு
கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை கிளை சார்பில், 2026 - 27ம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரும் மே 3ம் தேதி மாலை 6:00 மணிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். 6,7,8,9 ம் வகுப்புகள் மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, டென்னி காயிட், கபாடி, வாலிபால், கிரிக்கெட், ஹேண்ட்பால் போன்ற விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு போட்டி மே 7ம் தேதி காலை 7 மணி முதல் மாணவர்களுக்கும், 8 ம் தேதி காலை 7 மணி முதல் மாணவியருக்கும் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.
பங்கேற்பவர்கள் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ்கள் மற்றும் பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் ஒரு ஆவணத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்