அரசு அகற்றிய முருகன் சிலை; மீண்டும் நிறுவ ஐகோர்ட் உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கோணப்பட்டி மலையில் அரசு தரப்பில் அகற்றப்பட்ட முருகன் சிலையை மீண்டும் நிறுவ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கோணப்பட்டி செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: கோணப்பட்டி மலையில் ஜோதிமுருகன் கோயில் உள்ளது. அங்கு முருகன் சிலை இருந்தது. தைப்பூச திருவிழாவையொட்டி அங்கு பூஜை, அன்னதானம் நடத்த திட்டமிட்டோம். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜன., 20 ல் வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் முருகன் சிலையை அகற்றினர்.
தற்போது சிலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளது. கோயில் நடவடிக்கைகளில் தலையிட வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகளுக்கு உரிமை இல்லை. அவர்கள் கிராம மக்களின் அனுமதியின்றி சிலையை எடுத்துச் செல்ல முடியாது.
அரசியலமைப்பு மக்களுக்கு மத சுதந்திரம், அவரவர் கலாசாரம் மற்றும் சமூகத்திற்கேற்ப செயல்படுவதற்கான உரிமையை உறுதி செய்துள்ளது. சிலையை மீண்டும் நிறுவ சாணார்பட்டி தாசில்தார், போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அனுமதியின்றி முருகன் சிலையை நிறுவியதாக அரசு தரப்பு தெரிவித்தது. இவ்வழக்குநிலுவையில் இருந்த போது,சிலையை மீண்டும் நிறுவ அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
அதனடிப்படையில் கலெக்டர் ஜன., 29 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். போலீஸ் தரப்பில், மனுதாரர் உள்ளிட்ட சிலரின் இச்செயலானது சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கக்கூடும்,' என தெரிவிக்கப்பட்டது.
முருகனுக்குரியது வேல்
அக்குன்று அரசு புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் அமைந்துள்ளது. அதன் மீது ஒரு வேல் நிறுவப்பட்டுள்ளது. அது கிராம மக்களால் வழிபடப்படுகிறது. இவ்விபரம் வருவாய்த்துறை ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை வழிபடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என அரசு தரப்பில் ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்விஷயமே, அவ்வேலைக் கொண்ட ஒரு கோயில் அங்குள்ளது என்பதை நிரூபிக்க போதுமானது. இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதிலும் கூட குறிப்பாக முருகக் கடவுளின் பக்தர்கள் அனைவரும் 'வேல்' என்பது முருகனுக்குரியது என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.
வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் கலெக்டரின் உத்தரவின்படியும், அச்சிறு குன்றின் மீது ஒரு 'வேல்' ஏற்கனவே இருக்கும் நிலையில், அதனுடன் சேர்த்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறல்ல. சிலையை நிறுவுவது ஆட்சேபனைக்குரியது என அரசு தரப்பில் முன்வைக்கும் வாதத்திற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.
'வேல்' தொன்றுதொட்டு அங்கு இருந்து வருவதால், அப்பகுதியானது 'வேலுடன் கூடிய ஒரு பழமையான முருகன் கோயில்' என்றே கருதப்பட வேண்டும். அங்கு எழுந்தருளியுள்ள கடவுள் ஜோதிமுருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
மதசுதந்திரம்
அங்கு ஒரு பழமையான கோயில் இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் மனுதாரரால் சமர்ப்பிக்கவில்லை என அரசு தரப்பு முன்வைத்த கருத்து முற்றிலும் தவறு. அது வருவாய்த்துறை ஆவணங்களுக்கு முரணானது. 'வேலு'டன் சேர்த்து முருகனின் சிலையை அங்கு நிறுவுவது அரசியலமைப்பு பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு உட்பட்டது.
கடவுள் பெயரில் பட்டா
அரசு புறம்போக்கு நிலம் மீது மனுதாரர் எவ்வித உரிமையையும் கோர இயலாது என அரசு தரப்பு கூறியது. புறம்போக்கு நிலம்' எனும் சொல்லானது, அந்நிலத்தின் வாயிலாக அரசுக்கு எவ்வித வருவாயும் கிடைப்பதில்லை என்பதையே குறிக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் புறம்போக்கு நிலங்களிலேயே அமைந்துள்ளன.
இக்கோயில்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. அக்காரணத்தின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கோயில் மற்றும் அதற்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, கோயிலின் மூலவர் (கடவுள்) பெயரிலேயே கோயில்களுக்கு பட்டா வழங்க வேண்டிய தருணம் இதுவேயாகும்.
அங்கு கரடுமுரடான பாதை உள்ளது. முறையான பாதை, பாதுகாப்பு இல்லாததால் சிலையை நிறுவ அனுமதி வழங்க முடியாது,' என அரசு தரப்பு கூறியது. இவ்வாதம் விசித்திரமானது; ஏற்க முடியாதது. பழநி கோயிலில் முன்பு கரடுமுரடான பாதை இருந்தது. பின் மலையில் ஏறுவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. சிலையை நிறுவுவதில் கிராம மக்களுக்கு விருப்பமில்லை என்பதற்கு, அரசு தரப்பில் ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை.
முருகனுக்கு பூஜைகள் அல்லது அங்கு திருவிழாக்களை நடத்துவதால் மட்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. கோயிலின் பக்தர் என்ற முறையில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்ய, நிவாரணம் கோர உரிமையுடையவர். மனுதாரர் ஒரு தனிநபர்; அறங்காவலர் அல்ல.
அறநிலையத்துறையின் கீழ் பதிவு செய்யவில்லை என்ற அரசு தரப்பின் வாதங்கள் அறநிலையத்துறை சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை. கலெக்டர், தாசில்தார், போலீசார் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு தமிழகத்திலுள்ள கோயில்கள், ஹிந்து அறநிலையத்துறை சட்டம் குறித்தும் எவ்வித தெளிவும் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.
கலெக்டரின் உத்தரவு ரத்து
கலெக்டர் ஜன., 29ல் பிறப்பித்த உத்தரவில் சிலையை நிறுவ அனுமதி வழங்க மறுத்துள்ளார். அது ரத்து செய்யப்படுகிறது. சிலையை மனுதாரர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் சிலையை குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். அவர்களும் பிற பக்தர்களும் இணைந்து திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
முன்னாள் தமிழக முதல்வரின் அனுமதி இல்லாமல் இது போன்ற மதசுதந்திர பறிப்புகள் நடந்திருக்காது என்பதனை யும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளுமா
சரியான நபர்கள் சரியான இடத்தில இருந்தால் அந்த தீர்ப்பு எப்படி தரம் மிகுந்ததாக உள்ளது என்பது இது எடுத்துக்காட்டு. சரியான, முறையான தீர்ப்பு. ஒரு சமயத்தை மட்டும் அடக்க நினைக்கும் கும்பலுக்கு கொடுத்த சாட்டையடி.
அறநிலையத்துறை துறை அதிகாரிகள் ஒரு சட்டம் தெரியாது. இதில் பாதி பேர் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள்.
திரு அருள் முருகனின் சிலையை அகற்றியவர்களின் குடும்பம் பெருந்துன்பத்தை பெற்று வேரோடும் வேரடி மண்ணோடும் அழிந்து போகட்டும்
இருந்தாலும் இந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. ஆயிரக்கணக்கான குன்றுகளில் சிலுவை வரைந்து இயேசு சீக்கிரம் வருகிறார் என்று எழுதியுள்ளனர். அங்கெல்லாம் சர்ச் கட்ட முனைவர். தட்டிக்கேட்டால் இத்தீர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டுவர். தேவையற்ற செயல்.
ஆளும் குடும்பமே பஞ்சமி நிலத்தில் பத்திரிகை அலுவலகத்தைக் கட்டி அதனுள் ஒரு சிலையை நிறுவியுள்ளது. திருப்பரங்குன்றம் நிகழ்வுக்குப் பிறகு அரசின் நிலைப்பாடு ஒருதலைப்பட்சமாகவே உள்ளது.
அனுமதியின்றி சிலை நிறுவியதே பெரிய தவறு அதை அரசு யாருக்கும் தெரிவிக்காமல் அகற்றியது தவறு
இந்த சமய அறநிலையத் துறை க்கு தெரிந்து இருக்க வேண்டிய விஷயமே தெரியலை. அந்த கோயில் ஒரு கட்டத்தில் இருந்தாலும் அதுக்குன்னு வருமானம் வந்தாலும் அ நி துறைக்கு கண்ணை உறுத்தி இருக்கும். அதெல்ல்லாம் இல்லை என்பதால் அ நி துறைக்கு விஷயமே தெரியலை. இது எவ்ளோ கேவலம்? திருட்டு தீயமுக காரனுங்க பணம்ன்னா ஈ மொய்க்குற மாதிரி கும்பல் கும்பலா அங்கே இருப்பானுங
. இதற்காக ஆர்எஸ்எஸ் எதுவுமே செய்வதில்லை ....
தமிழ் நாட்டிற்கு பிஜேபி அரசாங்கம் தேவை. இல்லையேல் இது போல் மீண்டும் நடக்கும்