ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்

16


நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள் என ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.


அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமலில் இருக்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த போரால், உலகளாவிய எரிசக்தி வினியோகத்தில் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஹார்முஸ் ஜலசந்தியை திறங்கள்; கப்பல்கள் செல்லட்டும்.சுங்கவரிகள் வேண்டாம்.

பாகுபாடு வேண்டாம். வர்த்தகம் மீண்டும் தொடங்கட்டும். உலகப் பொருளாதாரம் இயங்கட்டும். பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்து என்பது ஒரு பொருளாதார மற்றும் மனிதாபிமானக் கட்டாயமாகும். இவ்வாறு ஆன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

Advertisement