ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மொபைல் எடுத்து செல்ல தடை
கடலுார்: கடலுார் அரசு பெரியார் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மொபைல் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை மையமான கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ‘சி.சி.டி.வி.,’ கேமரா வழியாக பார்வையிட வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள், பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல் போன்களை உள்ளே கொண்டு செல்லக் கூடாது என, போலீசார் நேற்று முதல் தடை விதித்துள்ளனர்.
மொபைல் போன்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் ஒப்படைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
பஞ்சாப் ரன் குவிப்பு: ராஜஸ்தான் அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு
-
அம்மா உணவகம் செய்தி / காஞ்சி
-
செய்தி எதிரொலி// செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
-
ஓரிக்கை பணிமனை வளாகத்திற்கு ‛கான்கிரீட்’ தரை தளம் அமைப்பு
-
தேர்தல் பணிகளில் தி.மு.க.,வினர் ‘சொதப்பல்’ மாவட்ட நிர்வாகிகளை மாற்ற ஸ்டாலின் முடிவு
-
கரை வேட்டியை மாற்ற தயாராகும் உ.பி.க்கள் கட்சி தாவும் முடிவில் 20 பேர்; ‘ஷாக்’கில் தி.மு.க.,