செய்தி எதிரொலி: செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

செய்யூர்:நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பட்டா பெயர் மாற்றம், நில அளவை, ஆதார் அட்டை விண்ணப்பித்தல், உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற வந்து செல்கின்றனர்.

தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அலுவலகத்திற்கு வரும் பெண்கள், முதியோர் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பகல் நேரத்தில் வெப்ப தாக்கத்தால் தண்ணீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர் என நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.

இதையடுத்து 2025 - -26ம் ஆண்டு காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தாசில்தார் அலுவலகத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமை க்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement