அலையில் கரை சேர்ந்துவிடுவோம் அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 23ம் தேதி, மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடந்தது.
அதில் மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள ஒரு தொகுதியில் தி.மு.க.,வும், அ.தி.மு.க,.வும் நேரடியாக மோதியது. தி.மு.க,.தரப்பில் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது. அ.தி.மு.க.,சார்பில் 500 ரூபாய் தரப்பட்டது.
ஆனால் அந்த தொகையும் முறையாக பல இடங்களில் போய் சேரவில்லை. இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கவனத்திற்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் ‘தி.மு.க.,விற்கு எதிராக பெரிய அலைவீசுது.. அதனால் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி’ என்று கூறி இருக்கின்றனர்.
இந்தப்பதிலால், விஷயத்தை சொன்னவர்கள், அலையில் கரை சேருகிறார்களோ.. இல்லை மூழ்கி காணாமல் போகப்போகிறோர்களா என்பது சில தினங்களில் தெரியும் எனக்கூறி உள்ளனர்.
மேலும்
-
மே 1, 4ல் 'டாஸ்மாக்' விடுமுறை
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிவு
-
போலீஸ் அதிகாரிகள் வேறு பணிகளில் தீவிரம் மீண்டும் தலை துாக்கும் கொலை சம்பவங்கள்
-
முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்
-
வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
-
புதுச்சேரியில் அதிகபட்சமாக 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு