முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்
துாத்துக்குடி: த.வெ.க., தலைவர் விஜய், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம் இரவு, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம், அதிகாலை 4:00 மணிக்கு அவர் திருச்செந்துார் வந்தார்.
பேட்டரி கார் மூலம் கடலுக்கு சென்று கால் நனைத்துவிட்டு, அங்கிருந்து சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். கோவில் வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்களும் பக்தர்களும் அவரை சூழ்ந்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
கூடியிருந்த பக்தர்களை பார்த்து கை அசைத்தபடி கோவிலுக்குள் சென்றார் விஜய். பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்த அவருக்கு த.வெ.க., நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கையில் வேலுடன் கோவிலுக்குள் அவர் சென்றார்.
அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததைத் தொடர்ந்து, விஸ்வரூப தரிசனத்தில் அவர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சுப்பிரமணியர் சன்னிதி முன்பு தரையில் அமர்ந்து மனமுருக முருகனை வேண்டி விஜய் பிரார்த்தனை செய்தார்.
சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும், அவர் தரிசனம் செய்தார். சம்ஹார சன்னிதி முன், அவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்து வழிபட்டார்.
சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த விஜயை கண்டதும், அவரை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின், காரில் துாத்துக்குடி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டார்.
கோவிலில் கடிதம்
விஜய், கிறிஸ்துவர் என்பதால், 'திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அதனால், அவரை தரிசனம் செய்ய வந்துள்ளேன் -- சி.ஜோசப் விஜய்' என எழுதி கையெழுத்திட்டு, திருச்செந்துார் கோவில் நிர்வாகத்திற்கு விஜய் ஒரு கடிதம் கொடுத்தார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஹிந்து மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் கோவிலுக்கு வரும்போது, அவர்களிடம் கடிதம் பெற்ற பின்பே தரிசனத்திற்கு அனுமதிப்பது நடைமுறை. அந்த அடிப்படையில் கடிதம் பெறப்பட்ட பின்பே, தரிசனம் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜய் இன்னமொரு ஹிந்து விரோதி , வேஷதாரி . ராமசாமிநாயக்கரை பின் பற்றும் யாவரும் கடவுள் மறுப்புக்கொள்கை உடையவரே .
பாஜக எல்.முருகன் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையா தவெக ஜோசப் விஜய்?
இதை நீங்கள் தேர்தலுக்கு முன் என் கூறவில்லை.. இங்கு இவர் அசிங்கப்படுத்துவது முருகபகதர்களையோ அல்லது இந்து சமயத்தார்களையோ அல்ல.. மாற்றாக ஓட்டுவங்கி அரசியலுக்காக மாற்று மதத்தை சார்ந்தோரை தான் அசிங்க படுத்துகிறார் ..இது போன்ற விஷயங்களில் மோடி அய்யாவின் நேர்மையை நாம் அனைவரும் உணரவேண்டும்.. அவர் பாகுபாடு இல்லாமல் நாட்டுநலனில் மட்டும் அக்கறை கொள்கிறார்கள்.. அவர் ஆட்சிக்கும் வந்தபின் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வன்முறையோ கலவரமோ இல்லை.. தமிழர்களாக நாம் மட்டும் இவரை போன்றோர்களல் ஏமாற்றப்படுகிறோம்
கொள்கை தலைவன் பெரியார், தினசரி சாமி தரிசனம் , இது பெரியாரை ஏமாற்றுவதா? சாமியை ஏமாற்றுவதா?
பாவாடை தாவணி உங்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைத்து விட போகிறார். மற்ற சமூகத்தை அவமதித்தது.
விஜய்க்கு அமெரிக்கா ஜார்ஜ் சோறேஸ் என்கிற நபரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வருகிறது. ஏன் என்றால் தமிழ்நாட்டை கிறிஸ்து மாலினமாக மாறறவேன்டும். இதற்கு ஏற்கனவே தி மு க கை கோர்த்து இங்கே செயல்பட்டது. நடைபெறவில்லை . ஆகவே இப்போ ஜோசப் விஜய் மூலம் ஆதாயம் தேடப்பார்க்கிறது. இன்னும் பல வேஷங்களில் ஜோசப் விஜய் செல்வர். ஆனால் எந்த ஒரு ஹிந்து திருவிழாவிற்கும் வாழ்த்து சொல்லமாட்டார். நீங்களே பாருங்கள். அப்போ தெரியும் இந்த பதிவை பார்த்தியா அருமை.
ஆதாரம்: சங்கித வித்வான், எம்.ஏ ஆல் பொலிடிகல் சைன்ஸ், வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி,
சோசப்பு என்னமா நடிக்கிறார்
ஹிந்து கோயில்களில் உள்ள சிலை எல்லாம் சாத்தான் என்று ஒரு கிறிஸ்துவ பாதிரி சொன்னார் அதை தவறு என்று சொல்வாரா ஜோசப்பை இந்த நாடகம் எல்லாம் முருகன் இடம் வைத்து கொள்ளாதீர்கள் முருகனை எல்லாரும் வழி பட்டு விட முடியாது அதற்கு மனம் நிர்மலமாக இருக்க வேண்டும் வெள்ளந்தி மனிதர்களின் ஏகபோக கடவுள் முருகன் அரசியலுக்காக முருகனை வழிபட்டுருந்தால் உங்கள் தோல்வி உறுதி
எல்லாம் டூப்பு.விஜய் ஒரு கிருத்துவர். அவர் மத படி மற்ற மத கோயில் வலி பாடுகள் செல்ல கூடாது. இவர் என்ற காரணாம் ஜோசிய காரன் கொடுத்த அட்வைஸ். அது சரி எப்படிய ஒரு கிருஸ்துவனிய்ய ஹிந்துக்கள் கோயிலுக்குள் அனு மதித்தார்கள். பணம் படுத்தும் பாடு இப்பா கோயிலில் இருக்கும் குருக்கள் பணத்தாசைய்ய கொண்டவர்கள். அதனலென இது நடந்திருக்கு. திருடர்கள் வெஆண்டிக்கொள்வார்கள் நான் அடிக்கும் கொள்ளையில் உனக்கு 50% காணிக்கையாக உண்டியலில் போராடுகிறேனான் என்று இதற்கும் அதற்கும் சம்பந்த முண்டோ?.
கரெக்ட்....இவர் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் இப்போது கடவுளுக்கு கூட பிரமாணிக்கமாய் இருந்ததில்லை. நெஞ்சில் குடியிருக்கும் வாக்காளர்களுக்கு மட்டும் 100% பிரமாணிக்கமாய் இருப்பார் என்று உறுதியாக நம்புது ஒரு கூட்டம். நடக்கட்டுமே
தேர்தல் பரப்புரையின் போது வேலின் மீது இவரது கட்சிக் கொடியை கட்டி அதை கையில் ஏந்தி மறைமுகமாக பிரசாரம் செய்தார். சிறுபான்மை வாக்கு வங்கியை காப்பது போல இருந்தது. அதே நேரம் வேலை கையில் ஏந்துவதால் இந்துக்களுக்கும் நண்பன் என்பது போல காட்டிக் கொள்ள முயற்சி செய்தார். ஆனால் இவர் யாருடைய உண்மையான காவலன்,இவரது பின்புலத்தில் வேலை செய்வது யார் என்பதை மற்ற சிறுபான்மையினர் அறிவார்கள். ஆனால் ஏமாளி இந்து அறியமாட்டான். குறிப்பாக பெண்கள் அறியவே மாட்டார்கள். அதை அறியும் போது காலம் கடந்து இருக்கும்.மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்