வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,230 ரூபாய்க்கும், சவரன், 1,13,840 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 130 ரூபாய் குறைந்து, 14,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,040 ரூபாய் சரிவடைந்து, 1,12,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement