கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா
செஞ்சி: செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
செஞ்சி, ராஜகிரி கோட்டை மலை மீது 1000 ஆண்டுகள் பழமையான கமலக்கண்ணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா கடந்த 20ம் தேதி பீரங்கிமேடு மகாமாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையடுத்து 9 நாட்கள் பூங்கரக ஊர்வலம், இரவு சுவாமி வீதியுலா, கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை நடந்தது.
நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
பக்தர்கள் ராஜகாளியம்மன், கமலக்கண்ணியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்தனர்.
கமலக்கண்ணியம்மனுக்கு கோட்டை வளாகத்திலும், புதுச்சேரி வாயில் அருகிலும் பாரம்பரிய முறைப்படி எருமை கிடா பலியிட்டனர். மாலை 3:00 மணிக்கு பீரங்கி மேடு மந்தை வெளியில் இருந்து தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். ஏராளமானோர் நாணயங்கள், காய்கனிகள், தானியங்களை வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விழா ஏற்பாடுகளை அரங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
மே 1, 4ல் 'டாஸ்மாக்' விடுமுறை
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிவு
-
போலீஸ் அதிகாரிகள் வேறு பணிகளில் தீவிரம் மீண்டும் தலை துாக்கும் கொலை சம்பவங்கள்
-
முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்
-
வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
-
புதுச்சேரியில் அதிகபட்சமாக 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு