புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிேஷகம்
திட்டக்குடி, ஏப். 29–
புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று வருஷாபிேஷக விழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 26ம் தேதி மாலை 5:00 மணியளவில் கணபதி ஹோமம், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, இரவு 8:00 மணியளவில் முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் விசேஷ ேஹாமம், சுதர்சன நரசிம்ம தன்வந்திரி மகாலட்சுமி ேஹாமம், காலை 10:30 மணியளவில் கடம் புறப்பாடு, விமானத்திற்கு கலசாபிஷேகம் நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று பகல் 11:00 மணியளவில் பஞ்சவடீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன் முன்னிலையில் மூலவர் சுவாமிக்கு வருஷாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள செங்கமலத்தாயார், ஆண்டாள் நாச்சியார், மகா மாரியம்மன், ஆஞ்சநேயர், சந்திரமவுலீஸ்வரர், வெற்றி விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
மேலும்
-
மே 1, 4ல் 'டாஸ்மாக்' விடுமுறை
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிவு
-
போலீஸ் அதிகாரிகள் வேறு பணிகளில் தீவிரம் மீண்டும் தலை துாக்கும் கொலை சம்பவங்கள்
-
முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்
-
வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
-
புதுச்சேரியில் அதிகபட்சமாக 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு