பாரம்பரிய நடனமான கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:‛கரகாட்டம்' எனும் பாரம்பரிய நடனமானது, அதன் ஆடும் முறையிலோ அல்லது உடை அணியும் முறையிலோ எவ்விதத்திலும் சிதைக்கப்படக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது. நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.
அரசு தரப்பு,‛கரகாட்டம்' என்ற பெயரில் உண்மையில் கரகாட்டத்தை நடத்துவதில்லை. மாறாக அது ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி போல் நடத்தப்படுகிறது,' என தெரிவித்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கரகாட்டம் என்பது தமிழ் பண்பாட்டில் போற்றப்படும் நடன வடிவங்களில் ஒன்று. 'கரகாட்டம்' என்றழைக்கப்படும் இந்நடனம், தமிழகத்தில் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை. இது மழைக் கடவுளான மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும் ஒரு காணிக்கையாக நிகழ்த்தப்படுகிறது. சிக்கலான, நுணுக்கமான அசைவுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில், நடனக் கலைஞர்கள் தங்கள் தலையின் மீது பானைகள் அல்லது குடங்களை சமநிலையில் நிறுத்தி ஆடுவதே இந்நடனத்தின் தனித்துவ சிறப்பு.
இதற்கு திறமை, கவன குவிப்பு தேவை. இதில் வண்ணமயமான ஆடைகள், தாள லயத்திலான மற்றும் நேர்த்தியான உடல் அசைவுகள் இடம்பெறும். இக்கலை வடிவம் தமிழக கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பாரம்பரியமாக, கரகாட்டம் ஆடுபவர்கள் தங்கள் தலையில் நீர் நிரம்பிய பானைகளை சமநிலையுடன் தாங்கி ஆடும் வித்தைகளுக்காக அறியப்படுகிறார்கள். இது கடவுள் மீதான பக்தியை குறிக்கிறது. 'கரகாட்டம்' எனும் பாரம்பரிய நடனமானது, அதன் ஆடும் முறையிலோ அல்லது உடை அணியும் முறையிலோ எவ்விதத்திலும் சிதைக்கப்படக்கூடாது. கரகாட்டம் நிகழ்த்தும்போது
'கரகாட்டக்காரன்'படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதுபோல் முறையான ஆடைகளை அணிவதையே அக்கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். ஒருநாள் மட்டும் கரகாரட்டம் நடத்த மனுதாரருக்கு போலீசார் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
பள்ளி கல்லூரிகளில் - EXTRA CURRICULAR ACTIVITIES ன் கீழ் - கரகாட்டம் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
ஏற்கனவே கரகாட்டத்தை திராவிடியால் மாடல் சிதைச்சாச்சு ....
மாடல் அரசுக்கு தைரியமாக ஆணையிடுவது பாராட்டத்தக்கது.. நீதிமன்றம் சொல்லி அவர்கள் எதையாவது கேட்டிருக்கிறார்களா?
பல இடங்களில் ஆண்களுக்கு பெண் வேசம் போட்டு சுற்றி இருக்கும் கூட்டத்தை ஆட வைத்துவிடுவார்கள்....மேலும்
-
காமன்வெல்த் பளுதுாக்குதல்: இந்தியா கலக்கல்
-
காது கேளாதோர் மாநில செஸ் 60 பேர் உற்சாக பங்கேற்பு
-
உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’
-
மாநில நீச்சல் போட்டி சென்னை வீரருக்கு வெள்ளி
-
ஒரு சொத்துக்கு ‘இரட்டை ஆவணம்’ தயாரித்து ரூ.3 கோடி நிலமோசடி: சகோதரர்கள் 4 பேர் கைது
-
மதுராந்தகத்தில் கலெக்டர் ஆய்வு