லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி: முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதின் மிக நெருங்கிய கூட்டாளியும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான ஷேக் யூசுப் அப்ரிடி, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, நம் நாட்டிற்கு எதிராக பயங்கரவாதத்தை துாண்டி வரும் அமைப்புகளில் லஷ்கர் - இ - தொய்பா முக்கியமானது. 2008ல் மும்பையில் கடல் வழியாக நுழைந்து, லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் என்ற பயங்கரவாதி. அவரது நம்பிக்கைக்குரிய தளபதியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
கடந்த 26ல், கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் லான்டி கோட்டல் பகுதியில் அவர் சென்ற போது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தான்.கைபர் பக்துங்க்வாவில் பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை சேர்ப்பது மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் அப்ரிடி செயல்பட்டவன்.
இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த வாரம் லாகூரில், லஷ்கர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (9)
அன்பே சிவம் - ,
29 ஏப்,2026 - 13:15 Report Abuse
1). ஓரு தீவிரவாதி ஒழிந்தால் இன்னொரு தீவிரவாதி புற்றீசல் போல் தொடர்ந்து வருவார்கள்.
2). மறுமுறை சந்தர்ப்பம் கிடைக்கும் போது இஸ்ரேல் காஸாவில் தீவிரவாதிகளை களைந்து எடுத்தது போல் நாமும் ஒரு கட்டம் கட்டி அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும். 0
0
Reply
Ram - ottawa,இந்தியா
29 ஏப்,2026 - 09:11 Report Abuse
நல்ல விஷயம் தானே 0
0
Reply
Pudhuvai Paiyan - ,இந்தியா
29 ஏப்,2026 - 08:22 Report Abuse
கவுண்டமணி mind voice, ஒருவேளை அவர் முக்காமல் இருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
29 ஏப்,2026 - 08:00 Report Abuse
தேசத்தின் எதிரிகளை - அவர்கள் நாட்டிலேயே - மர்மநபர்கள் உதவிகொண்டு - தீர்த்துக்கட்டுவதில் பாரதம் இஸ்ரேலையும் மிஞ்சிவிட்டது. 0
0
MUTHU - Sivakasi,இந்தியா
29 ஏப்,2026 - 08:31Report Abuse
இந்தியா உள்ளூர்ல உள்ளவனையே ஒன்னும் செய்யாது. இதிலே அங்கே போய் பாய்ஞ்சிருக்குமாக்கும் 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
29 ஏப்,2026 - 07:25 Report Abuse
நேரடியாக போர் தொடுத்து உங்களையெல்லாம் கொல்ல முடியாது என்கிற தத்துவத்தில் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே ஒவ்வொருவராக தீர்த்துக்காட்டுவதுதான் இன்றைய இந்தியாவின் ஸ்டைல். அனறைக்கு கனடாவில் ஆரம்பித்தது இன்றைக்கு பாகிஸ்தானில் புகுந்து விளையாடுகின்றது தோவல் பாணி. இப்போ தெருவில் உறங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்கார பாகிஸ்தானியர்களை கண்டுகொள்ள போராடுறீங்களா. இது மோடிஜி காலத்து இந்தியா. சிரித்துக்கொண்டே சித்துவிளையாட்டு. 0
0
Reply
அஜித் - ,
28 ஏப்,2026 - 23:40 Report Abuse
தோவல் வாழ்க 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
28 ஏப்,2026 - 22:44 Report Abuse
மர்ம நபர்கள் சுடுவது ஒன்றும் புதிதல்ல. அந்தந்த நாடுகளுக்கு இவற்றை யார் செய்வது, யார் செய்ய வைப்பது என்பது பற்றி நன்கு தெரிந்தும் விஷயம் வெளியில் வராது 0
0
Reply
ஈசன் - ,
28 ஏப்,2026 - 22:32 Report Abuse
ஒன்று கவனித்தீர்களா. இந்த மர்ம நபர்கள் என்ற சொல் இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் நிஜமாகவே அடையாளம் தெரியாத நபர்கள். அதே சொல் இந்தியாவில் அடையாளம் தெரிந்தாலும் வெளிப்படையாக சொல்ல முடியாத நபர்கள். ஐயோ இந்த மர்ம நபர்கள் தொல்ல தாங்க முடியலையப்பா... 0
0
Reply
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
Advertisement
Advertisement