தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
துமகூரு: மது குடிக்க பணம் தராததால், தம்பி தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
துமகூரின் மதுகிரி தாலுகா நித்தரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் கங்கராஜ், 36. இவரது அண்ணன் நரசிம்மமூர்த்தி, 38. இருவரும் கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், அண்ணனும், தம்பியும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசினர்.
இந்த நேரத்தில் மது குடிக்க பணம் தரும்படி கங்கராஜிடம், நரசிம்மமூர்த்தி கேட்டார். 'நீ வேலை செய்து கிடைத்த பணத்தில் மது குடிக்க செல்; என்னிடம் ஏன் பணம் கேட்கிறாய்' என்று கங்கராஜ் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
கங்கராஜை பிடித்து கீழே தள்ளி, அவரது தலையில் கல்லை துாக்கி போட்டு, நரசிம்மமூர்த்தி கொலை செய்தார். மதுகிரிக்கு தப்பி செல்ல முயன்ற அவர் கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement