தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் திருத்தேர் திருவிழா
திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடந்த திருத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அடுத்த தீவனுாரில் பிரசித்து பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 21ம் தேதி துவங்கியது. அதையடுத்து, தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் , சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான ஏப்ரல் 28 இரவு, பொய்யாமொழி விநாயகருக்கு திருப்பூ நுால் கல்யாணம் நடந்தது. 9ம் நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 29 காலை 9:30 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
(30ம் தேதி) மாலை 4:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 10:00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உபயதாரர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும்
-
கதவணையில் பராமரிப்பு பணியால் நீர் திறப்புகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
-
திருமா மீதான வழக்கு; ரத்து செய்தது ஐகோர்ட்
-
துண்டு பிரசுரம் வழங்கி மதம் மாற்ற முயற்சி : கிராம மக்கள் கோபம்
-
மேற்காசிய போர் பதற்றத்தால் விலைவாசி அதிகரிக்க கூடும்: மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கை
-
கோவிலுக்குள் நுழைய நாத்திகர் உரிமை கோர முடியுமா?: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி
-
அரசு பள்ளி மாணவர்கள் 127 பேருக்கு'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு