பழநியில் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தரிசனம்

பழநி: பழநி முருகன் கோயிலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் நேற்று மாலை நடந்த சாயரட்சை பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை பூஜை பிரசாதம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இங்கு தரிசனம் செய்தனர். பின்னர் போகர் சன்னதியில் வழிபட்டனர்.

Advertisement