விளையாட்டு போட்டிகளில் வென்ற அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு  

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் நடந்த ஆண்டு விளையாட்டு விழாவில், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் 57 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகம் இடையிலான விளையாட்டு போட்டிகளிலும், அகில இந்திய பல்கலைக்கழகம் இடையிலான போட்டிகளிலும் 13 மாணவிகள், 29 மாணவர்கள் கையுந்து பந்து, கைப்பந்து, கூடைபந்து, வளைகோல் பந்து, மேசைபந்து, சதுரங்கம், ஜூடோ, மல்லர் கம்பம் ஆகிய போட்டிகளிலும், முதல்வர் கோப்பைக்கான போட்டிகளிலும் வென்றனர். 

இந்த மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம், முதன்மையர் வளர்ச்சி குழுமம் கோபிநாத், உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன்னாள் மதல்வர் மூர்த்தி ஆகியோர் பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதில், உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா, உதவி பேராசிரியர் ஸ்ரீதேவி, இணை பேராசிரியர் சதீஷ்குமார் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

Advertisement