மதம் மாற்ற முயற்சி கிராம மக்கள் கோபம்
கெலமங்கலம்: கெலமங்கலம் அருகே, வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை வழங்கி, மதம் மாற்ற முயன்றதாக கூறி, தங்களது கிராமத்திற்கு வந்த கிறிஸ்துவர்களை, பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி கிராமத்திற்கு நேற்று காலை வேனில் வந்த 20க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள், வீடுகள்தோறும் கிறிஸ்துவ மதம் சார்ந்த துண்டு பிரசுரங்களை வழங்கி, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் நல்லது நடக்கும் என கூறினர்.
'ஆண்கள் வே லைக்கு சென்றிருந்த நேரத்தில், எந்த அனுமதியும் பெறாமல், கிராமத்திற்குள் வந்து, எவ்வாறு மதம் மாற்ற முயற்சி செய்யலாம்' என கேட்டு, அக்கிராம பெண்கள் அந்த கிறிஸ்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால், அவர்கள் வேனில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். வேனை சுற்றி வளைத்தனர் கிராம மக்கள்.
பிரச்னை பெரிதாகவே, கெலமங்கலம் போலீசார் வந்து, 20க்கும் மேற்பட்டோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதையடுத்து, 'இதுபோல மீண்டும் நடந்து கொள்ளக் கூடாது' என எச்சரித்து அனுப்பினர்.
அதேபோல, தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை, மஞ்சுமலை, மஞ்சுகொண்டப்பள்ளி, அந்தேவனப்பள்ளி, நுாருந்துசாமி மலை உட்பட பல்வேறு கிராமத்திலும், வாகனத்தில் வந்த, 50க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள், வீடுகள்தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கி, மத மாற்றம் செய்ய முயன்றனர்.
அவர்களை தேன்கனிக்கோட்டை போலீசாரிடம், கிராம மக்கள் பிடித்து கொடுத்தனர்.
மேலும்
-
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
-
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர் *ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
-
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்
-
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி; முந்தைய ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்