வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்

26


சென்னை: வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(மே.2) அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.


தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற வேண்டும்; வழக்கு வாயிலாக தனக்கு ஏதும் சிக்கல் வரக்கூடாது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் ஆன்மிக பயணத்தில் இறங்கி உள்ளார். வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(மே.2) அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

அதனை தொடர்ந்து நாகூர் தர்கா வழிபாட்டில் விஜய் பங்கேற்க உள்ளார். இன்று இரவே வேளாங்கண்ணிக்கு விஜய் புறப்பட்டு செல்கிறார். அங்கு தனியார் ஓட்டலில் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.



தேர்தல் முடிவு மே4ல் வெளியாக இருக்கும் நிலையில் விஜயின் ஆன்மிக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஷீரடி சாய்பாபாவை விஜய் வழிப்பட்டார்.

Advertisement