ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி; முந்தைய ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகம்

5

நமது நிருபர்



நாட்டில் இந்தாண்டு ஏப்ரல் ஜி.எஸ்.டி., வசூல், ரூ.2.43 லட்சம் கோடி. முந்தைய ஆண்டை காட்டிலும் 8.7 சதவீதம் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதம் வசூல் ஆன தொகையை விட 8.7 சதவீதம் அதிகம். ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு உள்ளது.

உள்நாட்டு மொத்த வருமானம் 4.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.85 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 25.8 சதவீதம் அதிகரித்து ரூ.57,580 கோடியாகவும் உள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாயில் இருந்து தமிழகத்தின் பங்காக ரூ.8413 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் 46% சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் நீடித்த போதிலும், வணிகங்கள் ஏதும் பாதிப்பு இல்லாமல் நடந்துள்ளது என இந்த ஜிஎஸ்டி வசூல் தெளிவுப்படுத்தி உள்ளது. இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி உயர்ந்ததே, வசூல் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் பின்வருமாறு:

* ஏப்ரல் (2026)- ரூ.2.43 லட்சம் கோடி

* மார்ச் (2026)- ரூ.2.01 லட்சம் கோடி

* பிப்ரவரி (2026)- ரூ.1.83 லட்சம் கோடி

* ஜனவரி (2026)- ரூ.1.93 லட்சம் கோடி

* டிசம்பர் (2025)- ரூ.1.74 லட்சம் கோடி

* நவம்பர் (2025)- ரூ.1.70 லட்சம் கோடி

Advertisement