மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர் *ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரை:மானாமதுரையில் வீர அழகர் வெண்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

எதிர்சேவையை தொடர்ந்து பெருமாள் கோயிலில் வீர அழகருக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு வெள்ளை குதிரை வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி வீர அழகர் முக்கிய வீதிகளின் வழியே வீதியுலா வந்தார். காலை 7:05 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கள்ளழகர் வேடம் பூண்டு வந்த பக்தர்கள் வீர அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

வீர அழகர் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம்,பொறியாளர் பட்டுராஜன், மேலாளர் பாலகிருஷ்ணன்,பீனாஸ் என்டர்பிரைசஸ் உரிமையாளர், பத்திர எழுத்தர் வேல்முருகன், வேதா பிராப்பர்டி அண்ட் டெவலப்பர்ஸ் சுபி கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்கள் பிரபாகர், ராம்குமார், ஆனந்த கிருஷ்ணன் அண்டு கோ உரிமையாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், குணா(எ)குணசீலன், ஸ்ரீ பழனிஸ் ஓட்டல் உரிமையாளர் ஜான், அருணாச்சி அம்மன் சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர்கள் நாகராஜன்,ராஜேந்திரன்,குதிரை வாகன உபயதாரர்கள் நாகலிங்க கொத்தனார் வாரிசுகள் முருகானந்தம்,கணேசன், ஆறுமுகம்,நமச்சிவாயம்,கவுரீஸ்வரி அமேஸ்மென்ட் உரிமையாளர் பில்லத்தி மூர்த்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement