புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்
நமது நிருபர்
ஆந்திரா, புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா இன்று (மே 01) காலை சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது; நாளையும் புத்த பூர்ணிமா விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள, 'சாய் குல்வந்த்' அரங்கில், இரண்டு நாட்கள் புத்த பூர்ணிமா விழா நடக்கிறது. இன்று (மே 01) காலை 8:00 மணிக்கு வேத பாரயணத்துடன் விழா துவங்கியது.
தொடர்ந்து 8:20க்கு விழா பற்றிய அறிமுகம்; 8:25க்கு புத்த துறவிகள் ஊர்வலம், 8:35க்கு விளக்கு ஏற்றுதல்; 8:40க்கு துறவிகளின் பூஜைகள், 8:50க்கு புத்த துறவி கெம்போ சம்டுக் லாமாவின் உரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை; 9:00க்கு பஜனை, மங்களாரத்தி நடைபெற்றது.
ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மற்றும் புத்த துறவிகள் ஏராளமானோர் புட்டபர்த்திக்கு வருகை தந்துள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.ஜே. ரத்னாகர் புத்தர் சிலையை திறந்து வைத்தார்.
இன்று மாலை 5:00 மணிக்கு வேதம்; 5:20க்கு தம்மிக்கா கலபுகே உரை; 5:30க்கு பால விகாஸ் சிறுவர்களின் நடனம்; 6:00க்கு தெய்வீக சொற்பொழிவு; 6:20 மணிக்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.
நாளை (மே 2)
நாளை காலை 8:00 மணிக்கு வேதம்; 8:30க்கு பாரம்பரிய நாட்டுப்புற இசைக்குழு ஊர்வலம்; 8:40க்கு, 'ஓம் மணி பத்மே ஹும்' மந்திரத்தின் கூட்டு முழக்கம்; 8:50க்கு எஸ்.எஸ்.எஸ்.எஸ்., எனும் ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் ஹிமாச்சல பிரதேச தலைவர் பேராசிரியர் யோகிந்தர் வர்மாவின் உரை; 9:00க்கு புத்த தரிசனம் பற்றிய காணொளி; 9:05க்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.
மாலை, 5:00 மணிக்கு வேதம்; 5:30க்கு, 'ரிதமிக் பீட்ஸ்' பெண்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி; 5:40க்கு பால விகாஸ் மாணவர்களின் நடனம்; 6:00க்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.
இந்த மாதம் தமிழுக்கு சித்திரை, இப்போ சித்ராபவுர்ணமி திதி. புத்தர் பிறந்தது வைகாசி விசாக மாதத்தில் வரும் பவுர்ணமியில் தான் புத்த பூர்ணிமா கொண்டாடப்படும், இன்று இலங்கையில் புத்த பூர்ணிமா கொடாடப்படவில்லை, வருகிற 30ஆம் திகதிதான் உலகெங்கும் கொண்டாடுறாங்க.
இதுக்கு தேசிய விடுமுறை கொடுங்க அதை விட்டுவிட்டு கிறிஸ்துமஸ், ஈஸ்டர்க்கு போய் விடுமுறை கொடுத்திகிட்டுமேலும்
-
இங்கிலாந்து டெஸ்ட்: சான்ட்னர் விலகல்
-
ஆசிய ஐஸ் ஹாக்கி: இந்தியா வெற்றி
-
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: தாமஸ் பாட்மின்டன் காலிறுதியில்
-
ராஜஸ்தானில் நகை வியாபாரி தற்கொலை: சென்னை மாநகர போலீசாருக்கு சிக்கல்
-
டென்னிஸ்: அரையிறுதியில் மனாஸ்
-
கால்நடை மருத்துவர்கள் களப்பணிக்கு முன் அனுமதி பெறும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை