கன்டெய்னரில் மாடுகள் கடத்தல் திருப்பத்துார் போலீசில் வழக்கு
- நமது நிருபர் -
திருவள்ளூர் மாவட்டம், சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 25; விலங்குகள் நல ஆர்வலர். இவர், திருப்பத்துார் மாவட்டம், அம்பலுார் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்துள்ள புகார்:
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே, கேரள பதிவு எண்ணுடன் சென்ற கன்டெய்னர் லாரியில், ஆந்திராவில் இருந்து சட்ட விரோதமாக கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்பட்டன.
மாடுகளால் அசைய கூட முடியவில்லை; ஒன்றின் மீது ஒன்றாக கட்டியிருந்தனர். மாடுகளை கடத்தி செல்வோரிடம், எவ்வித ஆவணங்களும் இல்லை. அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புகார் குறித்து, அம்பலுார் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். மாடுகள் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
-
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர் *ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
-
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்
-
ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 2.11 லட்சம் கோடி ரூபாய்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்
Advertisement
Advertisement