'பிரெஞ்சு மொழி ரத்து செய்வதை கைவிடாவிட்டால் போராட்டம்'

புதுச்சேரி: பிரெஞ்சு மொழியை ரத்து செய்வதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என, சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் தற்போது வரை ஜெர்மனிய மொழி விருப்ப பாடமாக உள்ளது. ஜெர்மன் நாடு இந்தியாவிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஜெர்மனிய மொழியை விருப்ப பாடமாக படிக்க மத்திய அரசு கேந்திர வித்யாலயா பள்ளியில் வழிவகை செய்கிறது.

ஆனால் புதுச்சேரி பிரான்ஸ் நாட்டுடன் மொழி கலாசாரம் வணிகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் தொடர்பில் உள்ளது. ஆனால் மத்திய அரசு பிரெஞ்சு மொழியை ரத்து செய்ய நினைக்கிறது. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை கற்பிப்பதை தடை செய்வதை ஏற்க முடியாது. தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ள அனைத்து சாராம்சங்களையும் முழுமையாக அமல்படுத்துங்கள். இல்லையெனில் ஏற்கனவே உள்ள கல்வி முறையே தொடரட்டும்.

பிரெஞ்சு படிப்பதை தடை செய்யும் விதமாக மத்திய அரசு செயல்பட்டால், தி.மு.க., இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement