வேகத்தடையில் விழுந்த பெண் பலி

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலரில் இருந்து வேகத்தடையில் விழுந்த பெண்

உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், புத்தாம்புதுார் பகுதியை சேர்ந்த கலைமோகன் என்பவரது மனைவி வசந்தி, 54; இவர் கடந்த, 22ல் மகன் விக்ரமன், 24, என்பவருடன், ேஹாண்டா ஆக்டிவா மொபட்டில், கரூர்-ஈரோடு சாலை புன்னம்சத்திரம் பகுதியில் சென்று

கொண்டிருந்தார்.மொபட்டை விக்ரமன் ஓட்டியுள்ளார். அப்போது, வேகத்தடையில் மொபட் சென்ற போது வசந்தி தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. பிறகு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தி, நேற்று முன்தினம்
உயிரிழந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement