நடை பயிற்சி சென்ற முதியவர்அரசு பஸ் மோதி உயிரிழப்பு

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, நடை பயிற்சி சென்று கொண்டிருந்த முதியவர், அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து, 70; டீக்கடை நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை நத்தமேடு பகுதியில், நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியது. அதில், படுகாயம் அடைந்த மருதமுத்து, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்தார். இதையடுத்து, அரசு பஸ் டிரைவர் வெள்ளியணையை சேர்ந்த பன்னீர் செல்வம், 57; என்பவர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement