விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.68 கோடி இழப்பீடு
விழுப்புரம்: சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 1.68 கோடி இழப்பீடாக வழங்க விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் வினோத்,38; இவர், சென்னையில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தார்.
இவர், கடந்த 2024ம் ஆண்டு பிப்., 24ம் தேதி இரவு 8.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து ஏழுசெம்பொன் கிராமத்திற்கு தனது பைக்கில் சென்றார். பூத்தமேடு மின்வாரிய அலுவலகம் எதிரே வந்த போது சாலையில் நிறுத்தியிருந்த நெல் அறுவடை எந்திரம் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இறந்த வினோத் மனைவி ராஜலட்சுமி, செஞ்சி வழக்கறிஞர் கதிரவன் மூலம் இழப்பீடு கோரி விழுப்புரத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், இறந்த வினோத் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 300 ரூபாயும், 7.5 சதவீதம் வட்டி மற்றும் செலவு தொகையை வழங்க வேண்டும் என ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும்
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி