அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சென்னை: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, மதிய நேரப்பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுத்தியுள்ளது.
கோடை காலம் துவங்கியது முதல் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி, மதிய நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சாலை மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, மதிய நேரப்பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுத்தியுள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்துப் பணிகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.
தார் ஊற்றுதல், வெல்டிங் போன்ற அதிக வெப்பத்தை உருவாக்கும் வேலைகளை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக நிழற்குடைகள், சரியான காற்றோட்டத்துடன் கூடிய ஓய்வு அறைகள் மற்றும் தடையற்ற குளிர்ந்த குடிநீர் வசதி செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணி நடக்கும் பகுதிகளில் முதலுதவி மையங்கள் மற்றும் ஓஆர்எஸ் மற்றும் குளுக்கோஸ் இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ்களில் ஐஸ் பேக்குகள் மற்றும் ஐவி திரவங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சுங்கச்சாவடி ஊழியர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவதைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த முடிவினால், துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை, சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை, என்.ஹெச்.48 விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல மனது. நெடுஞ்சாலை துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போல் ஒவ்வொருவரும் மற்றவர் வேலையில் உள்ள கஷ்டத்தை புரிந்து கொண்டால், பெருமளவு பிரச்சினைகள் தீரும்.மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்