ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சட்டவிரோத வசூலை அனுமதிக்க முடியாது கூறி வருகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயல்பான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை 'டிரம்ப் ஜலசந்தி' என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது, இணையத்தில் கேலியான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
எங்கே இருக்கு?
ஹார்முஸ் ஜலசந்தி, ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ளது. இது, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகும்.
இந்த ஜலசந்தி என்பது மிகவும் குறுகியதாகும். அதன் மிகவும் குறுகிய பகுதி, 33 கி.மீ., அகலம் மட்டுமே உள்ளது. அதிலும், கப்பல்கள் செல்லும் பகுதி, 3 கி.மீ., துாரம் மட்டுமே உடையவை. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது.
ஹார்முஸ் என்ற பெயர், அப்பகுதியில் 13 முதல் 16ம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த பண்டைய துறைமுக நகரமான 'ஹார்முஸ்' நகரிலிருந்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுக்கு பதிலா ஜெயக்கடா ன்னு பெயர் வெச்சிருக்கலாம்
டிரம்ப் பெயரெல்லாம் வைக்க முடியாது போடா....
இந்த கொசு தொல்லை தாங்கமுடியலை நாராயணா...
புத்தி சுத்தமாய் பேதலித்துவிட்டது.... ஐயோ பாவம்
சுத்தமா கூறுகெட்டு போய்விட்டான். விட்டால் இந்த பூமிக்கும் டிரம்ப் என பெயரை சூட்ட சொல்வான் போலிருக்கு.
பரிதாபங்கள் சானலில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது.... டேய்... அவனை கொஞ்சம் யாரவது நிறுத்த சொல்லுங்களேண்டா...
சீக்கிரம் இவருக்கு ஒரு பாயை பிரித்து போடுங்கள்! பொழுது போகாத நேரத்தில் அதை பிராணடிக் கொண்டு இருக்கட்டும்! இப்படி அறிக்கை விடுவது தவிர்க்க படும்!
டிரம்ப்லாந்து என்று அமெரிக்காவுக்கு பெயரிடுவார் என்று நினைத்தால் இப்படி ஒரு சிறிய பகுதிக்கு தனது பெயரை வைத்து அவமானப்படுத்தி விட்டார்
அமெரிக்க ஐக்கிய நாடு என்பதை டிரம்ப் ஐக்கிய நாடு என்று மாற்றிவிடலாம்.
இந்தியா வை trumph பாரத் என்று மாற்றாமல் இருந்தால் போதும்
ம்கவும் எளிது.ட்ரம்ப் தன் பெயரை ஹார்மூஸ் என்று மாற்றிக் கொள்ளலாம்.
அதைவிட ஈரான் என மாற்றிக்கொண்டால் இன்னும் சிறப்பு.மேலும்
-
கிணத்துக்கடவு தொகுதியின் ‘கிங்’ ஆகப்போவது யார்? தேர்தல் முடிவை அறிய கட்சியினர் ஆவல்
-
மண் திட்டுகளால் துார்ந்த குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
-
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
-
மின்வாரிய அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
-
இன்று இனிதாக
-
செங்கை ரயில் நிலைய வளாகத்தில் டூ–வீலர் திருட்டு அதிகரிப்பு