உத்தரகோசமங்கையில் உலக நடன தின விழா காலை முதல் மாலை வரை நடந்தது
உத்தரகோசமங்கை: ஏப். 30--: உலக நடன தினத்தை முன்னிட்டு உத்தரகோச மங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட பரதக் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் உலக நடன தினத்தை முன்னிட்டு மங்களநாதர் சுவாமி கோயில் நடராஜர் கலையரங்கில் ஏராளமான நடன நாட்டியப் பள்ளி மாணவிகளின் கண்கவர் நடனம் நடந்தது.
ராமநாதபுரம் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், ராணி அபர்ணா நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மாவட்ட பரதக் கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் சுகந்தி, பொரு ளாளர் முத்துலட்சுமி, செயலாளர் காயத்ரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காலை 9:30 மணி முதல் மதியம் 4 மணி வரை தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது.
தனி நடனம் மற்றும் வரவேற்பு குழு நடனத்தில் ஆர்வமுடன் மாணவிகள் பங்கேற்று நடனமாடினர்.பரதநாட்டிய மாணவி களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விழாவில் ஆசிரியர் செந்தில்குமார், தொழிலதிபர் ராஜா, முத்துப்பாண்டி, கார்த்திக் உட்பட பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி